பணம் கொடுக்காவிட்டால் பொருட்களை எரிப்பதாக வட்டி முதலையின் மீது குற்றச்சாட்டு

மூவார், ஏப்ரல் 25-

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தவறிய ஆடவர் ஒருவரின் வீடு மற்றும் காரை எரித்ததாக அலோங் எனப்படும் வட்டி முதலை ஒருவரை மூவார், செசியன் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

32 வயது சாசா புத்ரா ரொஸ்லான் என்கிற அந்நபர், நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் தங்காக், தாமான் வாவாசன் 2, ஜாலான் வவாசன் 2/1 – னில் உள்ள வீடொன்றில் 43 வயது பெண்ணுக்கு சொந்தமான காரையும் 39 வயது ஆடவரின் வீட்டையும் எரித்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்