சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சார்டினில் புழுக்கள்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 25-

ஜொகூர், பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் (BSI) -வில் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சார்டின் டின்களில் Anisakis spp. parasitic வகையை சேர்ந்த புழுக்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகை புழுக்கள் கலந்திருக்கு உணவை உட்கொள்வதால் கடுமையான வயிற்று வலி, வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்படக்கூடும்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 84,000 வெள்ளி மதிப்பிலான 16,320 கிலோகிராம் சார்டின் டின்களை மகிஸ் எனப்படும் ஜொகூர், மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை சேவையின் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தின் போது சார்டின் டின்களின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பட்டிருந்த வேளை அதில் parasitic வகையை சேர்ந்த புழுக்கள் கலந்திருப்பது கண்டெடுக்கப்பட்டதாக ஜொகூர், Maqis – யின் இயக்குநர் எடி புத்ரா முகமது யுசோப் மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்