பணிபுரியும் பெண்ணிடம் அநாகரீகமாக செயல்பட்ட நபர் தேடப்படுகிறார்

கோத்தா கினாபாலு, மே 20-

கோத்தா கினாபாலு, மங்கத்தால் – லில் உள்ள ஒரு தொலைப்பேசி உபகரணக் கடையில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் காசிம் முடா தெரிவித்தார்.

சந்தேகிக்கும் நபர் தொலைப்பேசியில் பேசிக் கொண்டு அவரின் ஆணுறுப்பை அகற்றி அநாகரீகமாக செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததாக காசிம் முடா கூறினார்.

அந்நபர் கடைக்கு வழக்கமான வாடிக்கையாளர் இல்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர் இதற்கு முன்னதாக அவரை பார்த்ததில்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காசிம் முடா மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்