வெளிநாட்டவர்களுக்கு அனுமதியின்றி சம்பளம் செலுத்தியதாக உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், மே 20-

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதியின்றி சம்பளம் செலுத்தியதாக கார் கழுவும் வளாகத்தின் உரிமையாளர் ஒருவர் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

44 வயது லோ செக் சியோங் என்கிற அந்த வளாகத்தின் உரிமையாளர் நீதிபதி இந்தான் நூருல் ஃபரீனா ஜைனல் ஆபிதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரையில் அபராதம் அல்லது கூடிய பட்சம் 12 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 55B(1) ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 7 ஆம் தேதி மாலை 3.10 மணியளவில் ஈப்போ, தாமான் மாஸ் ஃபாலிம் – மில் உள்ள ஒரு கார் கழுவும் வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்