பண்டார் ஶ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளியில் 2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு

சிரம்பான், மார்ச் 3 –

பண்டார் ஶ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளியில் 2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு சிறப்பாக நடைபெற்றது. கடந்த வருடம் காட்டிலும் இந்த வருடம் மாணவர்கள் அதிகரித்து, தற்பொழுது 119 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கு பதிந்துள்ளார்கள் என முதாலாம் ஆண்டு மாணவர்களுக்கான பதிவு நாள் ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷனிலா கோவின் திசைகள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மலேசியாவின் கவனிக்கத்தப் பள்ளியான பண்டார் ஶ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளியில் ஆண்டுக் ஆண்டு முதலாம் மாணவர்களின் பதிவு அதிகரித்து வருவதாகவும் இப்பள்ளியின் பெற்றோர்கள் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி கேசவன் தெரிவித்தார்.

சவால் மிக்க எதிர்காலத்தை எதிர்கொள்ள , மாணவர்களை தயார் படுத்துவதே இப்பள்ளின் நோக்கம் என கூறிய தலைமையாசிரியர், தமிழ்ப்பள்ளியே மாணவர்களுக்கு சிறந்த தேர்வு என கூறினார்.

பள்ளியில், முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவு மட்டும் ஏற்படுத்தாமல் பெற்றொர்களுக்காக பொற்றொரியல் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இப்பள்ளியின் சிறப்பு என கூறலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்