பழங்குடி மக்களுக்காக கண் பராமரிப்பு சேவை !

கோலாலம்பூர், மார்ச் 3 –

யுகேஎம் பல்கலைக்கழக மாணவர்கள் களம் இறங்கினர் .

ஹேமா எம் எஸ் மணியம்

இந்நாட்டிலுள்ள பழங்குடி மக்களின் கண் பராமரிப்பு சோதனைத் திட்டத்தில் களமிறங்கி அதனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் யுகேஎம் பல்கலைகழகத்தின் வணிக நிர்வாக முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் .

வணிக நிர்வாகத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் ” தி ட்ரைப் எனும் பூர்வீக சமுகங்களின் கண் ஆரோக்கியம் மிக அவசிமான ஒன்றாகும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடக்கப்பட்டது . உலு லங்காட்டிலுள்ள கம்போங் ஒராங் அஸ்லி கோலாபங்சுன் மற்றும் சுங்கை சொங்காக் ஆகிய இரு தோட்டத்திலுள்ள 113 பழங்குடி மக்களுக்கு கண் பரிசோதனைகள் சுல்தான் அப்துல் அஜிஸ் பொதுமருத்துமனையின் கண் பரிசோதனை பிரிவின் மருத்துவர்கள் அவர்களின் முழுமையான ஒத்துழைப்போடு நடந்து.

மேலும் , ஐந்து மணி நேரத்திற்குள் அவ்விரு தோட்டத்திலுள்ள பழங்குடி மக்களின் கண்களை பரிசோதனைச் செய்து டாப் ஓன்மற்றும் எப் எஸ் ஒப்திக்கல் ஆகிய இரு நிறுவனங்கள் வெ 23 , 560 ரிங்கிட் மதிப்புள்ள கண் கண்ணாடிகளை வழங்கி, கண் பரிசோதனையின் சமயத்தில் ஐந்து நபர்களுக்கு கண் சம்பந்தமான சிக்கல்கள் இருந்து வந்ததால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத்தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
” தி ட்ரைப் யுகேஎம் வணிக பிரிவின் சமூக திட்டத்தின் குறிகோள்களை அடைந்துவிட்டத்தாக பட்டப்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்