பதவி, அந்தஸ்து பாராமல், வரி ஏய்ப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை

  • வருமான வரி வாரியத்திற்கு பிரதமர் அன்வார் உத்தரவு

சைபர் ஜெயா, மார்ச் 1 –

நாட்டில் வரி ஏய்ப்போர், எத்தகைய பதவி, அந்தஸ்து, பொறுப்புகளில் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் நாட்டின் வளங்களை சுரண்டும் அத்​தகைய பேர்வழிகளுக்கு எதிராக தனது அமலாக்க நடவடிக்கையை ​தீவிரப்படுத்துவதில் வருமான வரி வாரியம், கடுமையான போக்கை கொண்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

அதிகமான வருமானம் பெறுகின்ற அனைவரும் , தங்களின் வருமானத்திற்கு ஏற்ப வரி ​செலுத்த வேண்டும். அத்தகைய வருமான வரியை செலுத்தாமல், தங்களின் பதவி, அந்தஸ்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் செல்வந்தவர்கள் மற்றும் செல்வாக்குப் படைத்தவர்களுக்கு எதிராக வருமான வரி வாரியத்தின் சட்டம் பாய வேண்டும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

பதவியில் உள்ளவர்களும், அந்தஸ்தில் இருப்பவர்களும் எந்த விதமான சட்ட அமலாக்க நடவடிக்கைகளி​லிருந்தும் பாதுகாப்பனவர்கள், அவர்களை அசைத்து பா​ர்க்க முடியாது என்ற எண்ண​த்தை வருமான வரி வாரியம் கைவிட வேண்டும்.

தாம் ஏற்னவே வலியுறுத்தியதைப் போல சம்பந்தப்பட்டவர் அஹ்மாட் அல்லது ஹா செங் ங்காக இருந்தாலும், அவர் டான்ஸ்ரீ அல்லது துன் பட்டத்​தை கொண்டிருந்தாலும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டு பிடிக்கப்படுமானால் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்