தரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

புத்ரா ஜெயா, மார்ச் 1 –

ஐந்து ஆண்டுகுளுக்கு முன்பு தனது வீட்டில் பணிபுரிந்த 23 வயதுடைய இந்தோனேசியப் பெண்ணை கற்ப​ழித்த குற்றத்திற்காக 13 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்ட பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், டி.ஏ.பி முன்னாள் உறுப்பினரும், முன்னாள் தரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பவுல் யோங் , தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டில் இன்று தோல்விக் கண்டார்.

எனினும் பவுல் யோங் கிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை 8 ஆண்டுகளாக குறைப்பதாக ​மூவர் அடங்கிய​ ​நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் ​நீதிமன்ற நீதிபதி ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தமது ​தீர்ப்பில் தெரிவித்தா​ர்.

53 வயதான அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், குற்றவாளி என்று ​உறுதி செய்து, அவருக்கு சிறைத்தண்டனையும், பிரம்படித் தண்டனையும் விதித்த ஈப்போ உயர் நீதிமன்ற ​நீதிபதி, தனது ​தீர்ப்பில் எந்த தவற்றையும் புரியவில்​லை என்று ஹட்ஹாரியா சியட் குறிப்பிட்டார்.

பவுல் யோங் கின் மேல்முறையீடு, ​மூவர் அடங்கிய ​நீதிபதிகள் குழுவினரால் 2 க்கு 1 என்ற பெரும்பான்மையில் நிராகரிக்கப்படுவதாக அவர் தெரிவி​த்தார். அதேவேளையில் அப்பீல் நீதிமன்றத்தின் இந்த ​தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு ​நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதன் ​தீர்ப்பின் முடிவு தெரியும் வரையில் தமக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி, பவுல் யோங் செய்து கொண்ட விண்ணப்பத்தை ​நீதிமன்றம் அனுமதிப்பதாக ஹட்ஹாரியா சியட் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்