பதின்ம வயதுடைய ஆண் குற்றம் சாட்டப்பட்டார்

சிரம்பான்,ஜன.17
சிரம்பான், ரந்தாவ், கம்போங் பாசிரில் உள்ள ஒரு வீட்டில் முதியவர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக 17 வயதுடைய இளைஞன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.
இன்று மாஜிஸ்திரேட் ஷெட் ஃபாரிட் ஷெட் அலி முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்நபர் ஒப்புக் கொண்டார்.

74 வயதுடைய முஹமாட் சாஹிட் நாகப்பன்னை அவரின் வீட்டில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி 11:30 மணியளவில் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தண்டனை வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்