பதின்ம வயதுடைய இளைஞர் விபத்தில் மரணம்

லிப்பிஸ்,ஜன.19
நண்பர்களுடன் உல்லாசமாக futsal கால்பந்து விளையாட்டில் பங்கேற்றப்பின்னர் வீடு திரும்பிக்கொண்டு இருந்த பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் பகாங், லிப்பிஸ், கம்போங் பெலாத்திக், ஜாலான் லிப்பிஸ் – லுபுக் கூலிட் சாலையின் 21 ஆவது கிலோ மீட்டரில் நிக​ழ்ந்தது.

இச்சம்பவத்தில் 13 வயதுடையை இளைஞர் கடும் காயங்களுடன் சம்பவ இடத்​திலேயே மாண்டதாக லிப்பிஸ் மாவட்ட போ​லீஸ் தலைவர் அஸ்லி முஹமாட் நோர்தெரிவித்தார். அந்த இளைஞர் வீட்டை நோக்கி ஹொன்டா எக்ஸ் 5 ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்