துன் மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான் மகாதீர் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் மூத்த மகனும், மலேசியாவின் 14 ஆவது மிகப்பெரிய பணக்காரருமான மிர்ஸான் மகாதீர், தனது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உத்தரவிட்டுள்ளது.

63 வயது மிர்ஸான் மகாதீர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, பல மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான மிர்ஸான் மகாதீர், கோடிக்கணக்கணக்கான வெள்ளி சொத்துக்களை கொண்டு இருப்பதற்கு, அவர் எங்கிருந்து பொருள் ஈட்டினார் என்பதை கண்டறியும் பொருட்டு, முதலில் அவரின் மொத்த சொத்து விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாம் பிரதமராக இருந்த காலக் கட்டதில் அரசாங்க ரீதியாக தனது மகன்களுக்கு எந்த உதவிகளையும் தாம் செய்ததில்லை என்றும் , அவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் தொழில் வளங்களை பெருக்கிக்கொண்டதாகவும், தமது ஓய்வூதியத் தொகையான பென்ஷன் ( Pencen ) பணத்தில்தான் தாம் இன்னமும் வாழ்ந்து வருவதாகவும் துன் மகாதீர் அடிக்கடி கூறி வருகிறார்.

இந்நிலையில், மகாதீரின் மூத்த புதல்வர் மிர்ஸான் மகாதீர், 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தனது சொத்து விவரங்களை அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஆணைப்பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் சொத்துக்களை குவிக்கும் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களின், தனிநபர்களின் சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் பிரபல பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அரசாங்க சார்பு நிறுவனங்களான GLC- யின் சொத்துக்களை வாங்குவதிலும், விற்பதிலும் துன் மகாதீரின் மகன் மிர்ஸான் மகாதீரின் வர்த்தக நடவடிக்கை அமைந்திருந்தது என்று அம்பலப்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்