பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி 2 நாட்களுக்கு இலவச ரயில் சேவை

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ரயில் சேவையை மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான KTMB வழங்குகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

பத்துமலை அருகிலேயே KTMB ரயில் நிலையம் இருப்பதால் மலாயன் ரயில்வே பெர்ஹாட் முதல் முறையாக இந்த இலவச ரயில் சேவையை வழங்குகிறது என்று இன்று பத்துமலை திருத்தலத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்ன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.

ஜனவரி 24 ஆம் தேதி புதன்கிழமையும், ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமையும் இந்த இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது. பத்துமலை தைப்பூச விழாவையொட்டி போக்குவரத்து அமைச்சு வழங்கும் 5 சிறப்பு சலுகைகளில் 2 நாள் இலவச ரயில் சேவையும் அடங்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பத்துமலை தைப்பூச விழாவையொட்டி வரும் ஜனவரி 23 ஆம தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை நான்கு நாட்கள், மூன்று இரவுகள் 24 மணி நேர ரயில் சேவை வழங்கப்படும் என்பதையும் அந்தோணி லோக் அறிவித்தார். இதில் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களுக்கு மட்டுமே இலவச ரயில் சேவையாகும்.
இலவச பயணத்திற்கு ரயில் நிலையத்திற்குள் உள்ளே செல்லவும், வெளியேறவும் இலவச டிக்கெட்டை பெற வேண்டும். அல்லது இலவச பயணத்திற்கு Touch’n Go, கிரேடிட் Kad அல்லது Debit Kad போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Batu Caves- Pulau Sebang- Batu caves மற்றும் Batu caves – Port Klang- batu caves ஆகிய இரு வழித்தடங்களில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு பத்துமலை நோக்கி ரயில் சேவைகள் விடப்படுவதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் மேலும் விவர்த்தார்.

தைப்பூச விழாவையொட்டி பத்துமலைநோக்கி மொத்தம் 72 ரயில் சேவைகள் விடப்படுகின்றன. Batu Caves- Pulau Sebang- Batu caves வழித்தடத்திற்கு 33 ரயில் சேவைகளும், Batu caves – Port Klang- batu caves வழித்தடத்திற்கு 39 ரயில் சேவைகளும் விடப்படவிருப்பதாக அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்