பத்து லட்சம் வெள்ளி 33 கோடி வெள்ளியாக தாண்டியது

கோலாலம்பூர், பிப்ரவரி 26 –

சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்ப்டடவர்களுக்கு டையலிஸிஸ் சிகிச்சையை அளிப்பதற்கான செலவினம் கடந்த 1999 ஆம் ஆண்டில் பத்து லட்சம் வெள்ளியாக இருந்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 33 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் தலைமை நிர்வாக செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் மிஹாம்மெட் அசிஸ் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக கோளாரினால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்க சொக்சோ நிதி உதவியை நீட்டியுள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினர், சொக்சோவிற்கு அப்பாற்பட்ட நிலையில் தங்களின் சேமிப்பு பணத்திலும் கைவைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த செலவினம் அவர்களுக்கு ஆண்டுக்கு சராசரி 65 ஆயிரத்து 520 வெள்ளி தொகையை எட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, மன உளைச்சல், நெருக்குதல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் டையலிஸிஸ் சிகிச்சைக்கு செலவிடப்படும் தொகை தொடர்ந்து அதிகரிக்கலாம்.
குறிப்பாக, வருகின்ற 2030 ஆம் ஆண்டில் இதற்கான செலவினம் 50 கோடி வெள்ளியாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்