பாஸ் தலைவர் காணப்படவில்லை

பெட்டாலிங் ஜெயா. பிப்ரவரி 26 –

அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கை வேண்டாம், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய முக்கிய உரையின் போது, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் காணப்படவில்லை. எதிர்க்கட்சியின் வரிசையில் அவரின் இருக்கை காலியாகவே காணப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் தேதியிலிருந்து 103 நாடாளுமன்ற அமர்வுகளில் 33 கூட்டத்தில் மட்டுமே மாராங் எம்.பி.யான அந்த மதவாதத கட்சித் தலைவர் கலந்து கொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற குறிப்புகள் காட்டுகின்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்