பள்ளியை விட்டு விலகும் மாணவர்கள் தடுக்கப்படும்

இடைநிலைப்பள்ளிகளில் பாதி படிப்பிலேயே நின்று விடும் இளையோர்களை தடுப்பதும், அவர்கள் மேற்கல்வியை தொடர்வதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் முக்கிய நிரலாக இருந்து வருகிறது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மலேசிய மாணவர்கள் குறைந்த பட்சம் எஸ்பிஎம் கல்வி வரை தொடர வேண்டும், தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பாதியிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்திருப்பதாக ஜாஹிட் விளக்கினார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள் பரிந்துரைகளில் பிரச்னைக்குரிய மாணவர்களை அணுக்கமாக கண்காணித்து வருவதும் முக்கிய நடடிவடிக்கைகளில் ஒன்றாகும் என்று துணைப்பிரதமர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்