பாக்கிஸ்தானிலிருந்து ஹலால் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யும் பரிந்துரை

கோலாலம்பூர், ஏப்ரல் 11-

வர்த்தகம், முதலீடு உட்பட இருவழி உறவை வலுப்படுத்திக்கொள்ள மலேசியாவும் பாக்கிஸ்தானும் இணக்கம் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் பிரதமர் ஷேஹ்பஸ் ஷாரீப் உடனான நேற்றைய தொலைப்பேசி அழைப்பில் அந்த இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பாக்கிஸ்தானிலிருந்து ஹலால் மாட்டிறைச்சியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஷேஹ்பஸ் -சின் பரிந்துரையை தாம் வரவேற்பதாக கூறிய பிரதமர், காசா மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழல் உட்பட உலகளாவிய விவகாரங்களை தாங்கள் இருவரும் பேசியதாக சொன்னார்.

மேலும், பாலஸ்தீனில் நிலவும் பிரச்னையில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டை பாக்கிஸ்தான் பிரதமர் புகழ்ந்துரைத்ததாகவும் அன்வார் இப்ராஹிம் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்