சிலாங்கூர் உம்னோ தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11-

சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டுள்ள மாநில உம்னோ, அதிலிருந்து இதுவரையில் மீண்டெழுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

சிலாங்கூர் உம்னோ-வின் தலைமைத்துவத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் சாஹித் ஹமிடி சீர்த்தூக்கி பார்க்க வேண்டுமென அரசியல் ஆய்வாளரான இல்ஹாம் சென்டரின் நிர்வாக இயக்குநர் ஹீசொம்முடின் பக்கர் வலியுறுத்தினார்.

உம்னோ-வை பலப்படுத்த மத்திய தலைமைத்துவம் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு சிலாங்கூர் உம்னோ ஆதரவளிப்பதில்லை என கூறி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மாநில பொருளாளர் பொறுப்பிலிருந்து தெங்க்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்க்கு ஜப்ருல் அஜிஸ் விலகியதை, சாதாரணமாக கருதிவிடக்கூடாது.

தனது அரசியல் செயலாளர் மேகாட் ஸுல்கர்ணைன் ஓமார்டின் தலைமையிலான சிலாங்கூர் உம்னோ-வின் செயல்பாட்டை மதிப்பீடு செய்து, சாஹித் ஹமிடி ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டுமானால், 15ஆவது நாடாளுமன்ற தேர்தல், 6 மாநில சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் உம்னோ கண்ட தோல்விக்காக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அதன் தலைமைத்துவம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமென ஹீசொம்முடின் பக்கர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்