பாரம்பரிய கிராமங்கள் அமைக்கும் முயற்சி, தொடரப்படாது

சிலாங்கூர் மாநிலத்தில் சீன புது கிராமங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிப்பதற்கு தாம் முன்னெத்த விவகாரம் சர்ச்சையாக மாறியதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தை ஒரு தொடர் கதையாக நீட்டிக்க விரும்பவில்லை என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு தாம் முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும், பெரும் சர்ச்சையாக, தவறான புரிதலுடன் நோக்கப்படும் என்பதால் இதனை தொடரப் போவதில்லை என்று டி.ஏ.பி யின் அந்த முன்னணி தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

ங்கா கோர் மிங் – மிங்கின் இந்த உத்தேச பரிந்துரைக்கு அம்னோ கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடுமையாக சாடியும் வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்