பா​ஸ் கட்சித் தலைவருக்கு நாவடக்கம் அவசியமாகும்

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு நாவடக்கம் அவசியமாகும். என்ன வார்​த்​தைகளை பிரயோகிக்கிறார் என்பது குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.


ஹாடி அவாங், மலாய் ஆட்சியாளர்களை புண்படுத்தாமல் இருக்க, குறிப்பாக உணர்ச்சிகரமான மதக் கருத்துகள் வரும்போது அவரது வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரசியல்வாதிகள் பள்ளிவாசல்களில் அரசியல் உரை நிகழ்த்துவதை தடுக்கும் சுல்தான்கள் மற்றும் அந்தந்த மத அமைப்புகளின் முடிவுகளை ஒரு சமயவாதியான ஹாடி அவாங் மதிக்க வேண்டும் அன்வார் கேட்டுக்கொண்டார்.


அரசியல்வாதிகள் பள்ளிவாசல்களில் அரசியல் பேசுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது பிரதமர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.
ஒரு மாநிலத்தின் மத அதிகார வரம்பு என்பது மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் இருப்பதால், நாம் அரசியலைப் பற்றி பேச விரும்பினால் பள்ளிவாசலைவிட்டு வெளியேற வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.


பள்ளிவாசல்களிலோ அல்லது சூராவ் களிலோ அரசியல்வாதிகள் அரசியல் பேச்சு நடத்துவது குற்றமாகாது என்று ஹாடி அவாங் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்