பினாங்கில் சிறப்புக் கல்வித் தமிழ்ப்பள்ளி உருவாக்கப்படும்

பினாங்கு, மார்ச் 14 –

பினாங்கு மாநிலத்தில் Sekolah Kebangsaan Jenis Kebangsaan Pendidikan Khas எனும் சிறப்புக் கல்வி தமிழ்ப்பள்ளியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு தெரிவித்துள்ளார்.

இத்திட்டம், மாற்றுத் திறனாளிச் சிறார்கள் தமிழ்மொழியில் கல்விக் கற்பதற்கு பெரும் துணையாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ சுந்தரராஜு குறிப்பிட்டார்.

இந்த முயற்சியானது, மாற்றுச் திறனாளி சிறார்களுக்கு பல நன்மைகளை தர வல்லதாகும்.

இந்த உத்தேசத் திட்டம் மீதான பரிந்துரை குறித்து வெகு விரைவில் கல்வி சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு குறிப்பாக கல்வி அமைச்சுக்கு தாம் முன்மொழியவிருப்பதாக டத்தோஸ்ரீ சுந்தரராஜு குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு பொது மக்களும் அரசாங்கமும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்