பினாங்கு அரசு பணியாளர்களின் வேலை நேரம் இன்று விவாதிக்கப்படும்

நோன்பு மாதத்தை தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் அரசு பணியாளர்களுக்கு வேலை நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தளர்வுகள் குறித்து இன்று மாநில கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுக்குறித்து இன்று கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று நேற்று Lebuh Queen, Liga Muslim Pulau Pinang – கில் ஏற்பாடு செய்திருந்த Bazar Ramadan நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இவ்வாண்டு நோன்பு மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் பகாங் மாநில அரசு பணியாளர்களின் வேலை நேரம் 12:30 மணி வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரையில், பினாங்கு மஜ்லிஸ் பண்டாராயா, Bazar Ramadan -களை ஒழுங்கமைக்க 27 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளதாகவும் Seberang Perai மஜ்லிஸ் பண்டாராயா -விற்கு 45 Bazar Ramadan உட்பட எட்டு Aidilfitri Bazar -களையும் அங்கீகரித்துள்ளதாக Chow கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்