இரண்டு மலேசியர்கள் உட்பட 9 பேர் கைது

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது போலீசார் மோசடி கும்பலை முறியடித்து இரண்டு மலேசியர்கள் உட்பட ஒன்பது சந்தேகிக்கும் நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் 50 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை முதலீடு திட்டத்தில் ஈர்த்ததுடன் அவர்களிடமிருந்து 105.26 மில்லியனை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மோசடி கும்பலில் மூளையாக செயல்பட்டு வந்த 42 வயதுடைய மலேசிய பிரஜை ஒருவர் கடந்த மார்ச் 6 ஆம் தேதி Songkhla, Sadao – வில் கைது செய்யப்பட்டதாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவின் தலைவர் Puttidej Bunkrapue அறிவித்தார்.

மற்றொரு நபராக, மலேசியாவில் முன்னதாகவே குற்றப் பதிவுகள் கொண்டிருந்த 26 வயதுடைய ஆடவன் ஒருவன் தனது 30 வயது தாய்லாந்து காதலியுடன் கைது செய்யப்பட்டதாக Puttidej விவரித்தார்.

கைது செய்யப்பட்ட மலேசிய பிரஜை உட்பட தாய்லாந்து பெண்மனியும் கம்போடியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் மோசடி செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் சந்தேகிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மலேசிய காவல்துறையின் ஒத்துழைப்பை கோருவதாக Puttidej விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்