பினாங்கு இந்து மக்களிடையே பிளவுகளை விதைக்க வேண்டாம்

பினாங்கு தைப்பூச கொண்டாட்டம் தொடர்பில் மாநிலத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் பிளவுகளையும், பேதங்களையும், பிரிவினையையும் விதைக்க வேண்டாம் என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமியை மாநில இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு தைப்பூச விழாவை நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக, ஒன்றுப்பட்ட நிலையில் இறை சிந்தனையுடன் கொண்டாடுவதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதி பூண்டுள்ள வேளையில் பினாங்கு மாநிலத்தில் இந்துக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை விதைக்க வேண்டிய ஒரு மூத்த தலைவர், தொடர்ந்து பல்வேறு குதர்க்கமான அறிக்கைகளை வெளியிட்டு, பிளவுகளையும், பேதங்களையும் விதைக்க முற்பட்டுவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தலைவர் பகிர்ந்து வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களினால் அவை குறித்து நிறைய பேர், சமூக வலைத்தளங்களில், சமூக ஊடகங்களிலும் வினவிய வண்ணம் உள்ளனர் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்..

மொழி, கலாச்சாரம் என இந்துக்களின் நலன் சார்ந்த அம்சங்களை உறுதி செய்யக்கூடிய தார்மீக கடப்பாடு தமக்கும் உண்டு என்பதை டாக்டர் இராமசாமி உணர வேண்டும். இந்நிலையில் தொடர்ந்து தவறான அறிக்கையினால் இந்துக்கள் மத்தியில் பிளவுகளையும், பேதங்களையும் விதைக்கும் முயற்சியை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது இந்து அறப்பணி வாரியத்துடன் இணைந்து நாட்டுக்கேட்டை செட்டியார் சமூகத்தினரும், பினாங்கு மக்களும் ஒன்றுப்பட்ட நிலையில் ஒற்றுமையாக தைப்பூசத்தை நடத்துதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எங்களுக்குள் எந்தப் பிளவுகளும் இல்லை என்பதை இந்து அறப்பணி வாரியமும், நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர்களும் செய்தியாளர்கள் கூட்டத்தின் வாயிலான முழு விளக்கத்தை அளித்து விட்டனர்.

எனவே பினாங்கு இந்துக்கள் மத்தியில் பேதங்களை விதைத்தும், பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மேலவை உறுப்பினரமான டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்