ஜப்பானில் விமானம் தீப்பற்றிக்கொண்டது

ஜப்பானில்டோக்யோ, ஹனீடாவிமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைசுக்கு சொந்தமான ஏர்பஸ் A 350 ரக பயணிகள் விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த விமானத்தில் இருந்த 379 பயணிகளும், விமானப் பணியாளர்களும் துரித வேகத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் , தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் தோக்கியோ விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தின் பாகங்கள் ஓடுபாதையில் சிதறி கிடக்கின்றன. விமானம் தீப்பிடித்ததற்கான காரணம் ஏதும் வெளியிப்படவில்லை என்றாலும் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகி வரும் வீடியோக்களில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் முன்பகுதியில் தீப்பிடித்த தீப்பிடித்த காட்சிகள் பதிவாகி உள்ளன. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள், விமானத்தில் பற்றிய தீயை அணைக்க தீவிரமாக போராடுவதை அவை காட்டுகின்றன. .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்