பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும்

பினாங்கு, மார்ச் 29-

பினாங்கில் மேற்கொள்ளவிருக்கும் எல்.ஆர்.டி இரயில் திட்டத்திற்கு அமைச்சரவையிலிருந்து ஒப்புதல் கிடைக்க பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தை ஏற்று, நடத்தி முடிப்பதற்கு எம்.ஆர்.தி கோர்ப் நிறுவனத்திடம் மத்திய அரசாங்கம் இதை ஒப்படைத்துள்ளதாகவும் பினாங்கு எல்.ஆர்.டி இரயில் சேவை 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிலிக்கான் ஐலாந்து – லிருந்து கொம்தார், ஜார்ஜ் டவுன் வரையிலான பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கை பினாங்கு அரசாங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டிருப்பதுடன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறந்த டெண்டர் -ரின் மூலம் எல்.ஆர்.டி இரயில் பாதை திட்டமிடப்பட்டதாகவும் அந்தோணி லோக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்