பினாங்கு கேபல் கார் திட்டத்திற்கு அனுமதி

பினாங்கில் முக்கிய சுற்றுலா வாசஸ்தலமான Bukit Bendera எனப்படும் கொடி மலையில் 24 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் கேபல் கார் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் இலாகாவின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் கட்டுமானம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று கொடி மலையை நிர்வகித்து வரும் வாரியமான Penang Hill Corporation நிர்வாகி செயோக் லே லெங் தெரிவித்துள்ளார்.

கொடி மலைக்கு செல்லும் மலைப்பாதையில் 2.9 கிலோ மீட்டர் தூரத்தைக்கொண்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இதன் நிர்மாணிப்புப்பணிகள் தொடங்கப்படுவதற்கு EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்கம் மீதான மதிப்பீடு அனுமதி கடந்த மாதம் கிடைத்துள்ளது.

பினாங்கு சுற்றுலாத்துறையின் புதிய வரவாக பார்க்கப்படும் முதலாவது கேபல் கார் திட்டமான இதன் நிர்மாணிப்புப்பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, அடுத்த 18 மாதங்களில் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செயோக் லே லெங் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் கடந்த 1923 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மலைரயில் போக்குவரத்து சேவை,பின்னர் Funicular ரயில் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1,996 மீட்டர் உயரத்தில் உள்ள கொடி மலைக்கு தற்போது ரயில் சேவையே முதன்மையாக விளங்கி வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்