அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனை காலத்தை 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பில் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரத்தில் மன்னிப்பு வாரியத்தின் முடிவே இறுதியானதாகும். அந்த முடிவுக்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது சவால் விடவோ முடியாது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விளக்கினார்.

மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவில் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்து இருப்பதை தாம் உணர்வதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இது மன்னிப்பு வாரியத்தின் இறுதி முடிவாகும். மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இந்த முடிவில் அமைச்சரவை சம்பந்தப்படவில்லை என்பதையும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்