பிப்ரவரி வரை 20,035 சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகள்

ஜோகூர், மார்ச் 14 –

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ம்.சி.ம்.சி கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டத்தில் கடந்த 2023 தொடங்கி இவ்வாண்டு பிப்ரவரி வரை 20,035 ரொக்கமில்லா பண பரிவர்த்தனை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் 2,740 வர்த்தகர்களும் வெற்றிகரமாக இத்திடத்தில் தங்களை பதிவு செய்துள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

கடந்த ஆண்டு மலாக்காவில் அறிமுகம் கண்ட இத்திட்டம் தற்போது ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

“2024 ஆம் ஆண்டில், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 61 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று கூலாய், நில மேம்பாட்டு வாரியம் (ஃபெல்டா) தைப் அன்டாக்கில் அமைந்துள்ள தேசிய தகவல் பரப்பு மையத்தில் (NaDi) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஒன்றில் கூறினார்.

சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டம் ஜோகூர் மாநில அரசு, ஃபெல்டா ஒத்துழைப்புடன் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும். ஜோகூர் மாநிலத்தில் 17 ஃபெல்டா குடியிருப்பு பகுதிகளில் சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தியோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்