38,010 மாணவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 14 –

சிகரெட் உள்ளிட்ட வேப் களை இளைஞர்கள் அல்லது மாணவர்கள் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு மலேசிய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு புகைப்பிடித்தல் இல்லாத சுகாதார திட்டத்தின் மூலம் மொத்தம் 15 லட்சத்து 40 ஆயிரத்து 35 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் 38,010 மாணவர்களுக்கு புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான தலையீடுகள் வழங்கப்பட்டதாக சுகாதார துணையமைச்சர் டத்துக் லுக்கானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபடும் மாணவர்களை கையாள்வதற்கு மலேசிய சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து 141 ஆலோசனை ஆசிரியர்கள் உட்பட போதைப்பொருள் தடுப்பு கல்வி ஆசிரியர் ஆகியோரை பணிக்கு அமர்த்தியதாக அறியப்படுகின்றது.

இத்திட்டத்தில் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை பொருந்துவதாக லுகானிஸ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்