பிரஞ்சு ம​லையேறி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

பினாங்கு, Teluk Bahang- கில் உள்ள பினாங்கு தேசிய பூங்கா வனப்பகுதியில் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலையேறி ஒருவர் சுமார் எட்டு மணி நேர தேடலுக்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

நேற்று திங்கட்கிழமை அந்த வனப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த பிரஞ்சு மலையேறி, மாலை 6 மணி வரையில் வனப்பகுதியை​ விட்டு ​வெளியேறாதது பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்பில் 6.07 மணியளவில் அவசரத் தகவலை பெற்ற Teluk ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தார், அந்த வனப்பகுதி​யில் தேடுதல் பணியை முடுக்கி விட்டதாக அதன் செயலாக்க கமாண்டர் Mohd Faiz Helmi தெரிவித்தார்.

17 பேர் கொண்ட வீரர்கள், அந்த வனப்பகுதியில் நான்கு திக்குகளாக பிரிந்து, தேடுதல் பணியைத் தொடங்கிய போது 37 வயதான Younes Oukali என்ற அந்த பிரஞ்சு மலையேறி இன்று அதிகாலை 1.22 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டதாக Mohd Faiz குறிப்பிட்டார்.

வனப்பகுதியையொட்டியுள்ள ஆற்றுப்படுகையில் படகு மூலமாகவும் அந்த பிரஞ்சு மலையேறி தேடப்பட்டதாக குறிப்பிட்ட Mohd Faiz, தேடுதல் மற்றும் மீட்புப்பணி அதிகாலை 4.58 மணிக்கு முடிவு​ற்றதாக அவர் தெரிவித்தார்.

அந்த பிரஞ்சு மலையேறி, பினாங்கு தேசிய பூங்காவில் மலையேறும் நடவடிக்கையை தொடங்குவதற்கு Pantai Acheh வாயிலாக Batu Hitam -மிற்கு செல்ல Teluk Kampi-கிலிருந்து புறப்பட்ட போது கடும் மழையின் காரணமாக அந்த வனப்பகுதியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்