பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை தாக்க வேண்டும் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்க வேண்டும், அதுதான் மஇகாவின் இன்றைய நிலைப்பாடு, மனம் திறந்தார் Awtar Singh

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

இந்திய சமுதாயத்தின் நலனைமுன்நிறுத்துவதாக கூறி, தங்களின் சொந்த லாபத்திற்காக எந்தப் பக்கம் சாயலாம் என்று லாலான்களைப் போல காயை நகர்த்தி வரும் மஇகா தலைமைத்துவம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்க்க வேண்டும், பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இன்றைய நிலைபாடு என்று மஇகாவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மஇகா பூச்சோங் தொகுதி தலைவரும், சிலாங்கூர் மாநில தகவல் பிரிவுத் தலைவருமான B. Awtar Singh பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

தலைமைத்துவத்திற்கு எதிராக மஇகா மாநாட்டில் கேள்வி கேட்கின்ற கிளைகள் மற்றும் டிவிஷன்களுக்கு தொல்லைகளை கொடுத்து வரும் மஇகா தலைமைத்துவம் , மஇகா துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட முனையும் ஒருவரை குறைந்த பட்சம் 250 முன்மொழிய வேண்டும், 250 பேர் வழிமொழிய வேண்டும் என்று முன்கூட்டியே எந்தவொரு நோட்டீசும் வழங்கப்படாமல் கடந்த மஇகா மாநாட்டில் அவசர அவசரமாக கட்சியின் அமைப்பு சட்டத்தில் புதிய திருத்தம் செய்ய முனைந்தது குறித்து தாம் கேள்வி எழுப்பியதால் இன்று தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக Awtar Singh குறிப்பிட்டார்.

கிள்ளானில் உள்ள ஒரு மசூதியில் ஓர் இந்து இளைஞரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட நிகழ்வில் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தாக்குவதற்கு தீவிரமாக முனைப்பு காட்டி வேலை செய்த மஇகா, அந்த வீடியோவை வைரலாக்கியதும் அவர்கள்தான் என்று Awtar Singh பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அன்வாரை குறைகூறியதற்காக தம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மஇகா பொதுச் செயலாளர் RT ராஜசேகரன் அபாண்டமாக பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்று Awtar Singh குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வாரை ஆதரித்து தாம் காணொளி வெளியிட்ட போது, இரவோடு இரவோடு தம்மை
அழைத்து மிரட்டியது இதே மஇகா தலைமைத்துவம்தான். அன்வாரை ஆதரிக்கக்கூடாது என்று தம்மை எச்சரித்ததும் இதே மஇகா தலைமைத்துவம்தான்.

அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனலை தாக்கி தாம் காணொளி வெளியிட்ட போது, எதற்காக பெரிக்காத்தான நேஷனலை தாக்குகிறீர்கள் என்று தன்னை எச்சரித்ததும் இதே மஇகாதான்.

அன்வாரை ஆதரிக்க வேண்டாம் என்கிறீர்கள், பெரிக்காத்தான் நேஷனலை தாக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள். அப்படியொன்றால், மடானி அரசாங்கத்தில் மஇகாவின் நிலைப்பாடு என்ன என்று தாம் கேள்வி எழுப்பியது தவறா? என்று Awtar Singh கேள்வி எழுப்பினார்.

மஇகா தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கிளைகளைப் பற்றியோ, டிவின்களைப்பற்றியோ எந்த கவலையும் இல்லை. அவர்கள் மஇகாவை தங்களின் குடும்ப சொத்தைப் போல் சொந்த நிறுவனமான பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் இப்போதைய கவனம் எல்லாம் தாங்கள் பதவியில் இருக்கும் போதே 35 மாடி கட்டடத்தை கட்டி முடித்து விட வேண்டும், தாங்கள் கொண்டுள்ள நோக்கத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்து காயை நகர்த்தி வருகின்றனர்.

அவர்களுக்கு இந்திய சமுதாயத்தைப்பற்றி கவலையில்லை,சொந்த நோக்கம்தான் முக்கியம் என்ற நிலையாகிவிட்டது என்று கடந்த 40 ஆண்டுகளாக மஇகாவில் உறுப்பினாக இருப்பதாக கூறும் Awtar Singh இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்