பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகமானோர் , தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லத் தொங்கியிருப்பதால் நாட்டின் பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.

கிழக்குகரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலை மற்றும் வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலை ஆகியவற்றில் காலை நிலவரப்படி வாகனங்கள் மெல்ல நகர்கின்றன. இதில் கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கென்த்திங் செம்ப்பாஹ் வரையில் சுமார் 17 கிலோ மீட்டர் ​தூரம் வரையில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கே நோக்கி, ஸ்லிம் ரிவேர்-ரிலிருந்து சுங்க்காய் வரையிலும், மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து RnR சுங்கை பேராக் வரையில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன.

இதேபோன்று பீடோர்-ரிலிருந்து தாப்பா வரையிலும் வாகனங்கள் மெல்ல நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் இன்று காலையல் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்