பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராக செல்கின்றது

கோலாலம்பூர், ஏப்ரல் 7 –

நோன்பு பெருநாளை முன்னிட்டு, சில இடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த போதிலும் இன்று காலை 11 மணி வரையில் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பலாசா டோல் கோம்பாக் வில் இன்று காலை 10 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் இருந்த போதிலும் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வாகனங்கள் தொடர்ந்து சீராக நகர்வதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

கோலாலம்பூர் காராக் கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை 178,977 ஆக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாக அவர் இன்று கூறினார்.

இருந்த போதிலும் நாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் இன்னும் சீராகவும் பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருப்பதை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்