பேருந்து ஓட்டும் பொழுது ‘டிக் டோக் லைவ் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை

அலோர் ஸ்டார், ஏப்ரல் 7 –

ஓப்ஸ் ஹரி ராயா அய்டிபித்ரி திடீர் சோதனையில், விரைவு பேருந்து ஓட்டும் பொழுது டிக் டோக் லைவ் செய்யும் ஓட்டுநர்கள் மீது சாலை போக்குவரத்து துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு விரைவு பேருந்திலும் தனது இலாகா ரகசிய அதிகாரிகளை நியமித்திருப்பதுடன் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குநர் டத்துக் லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

பேருந்தில் அத்தகைய செயல்களை புரியும் பேருந்து ஓட்டுநர்கள் கண்டெடுக்கபட்டால் அதனை காணொளி எடுத்து, தேதி மற்றும் எங்கு நடந்தது என்ற விவரங்களுடன் போலீஸ் தரப்புக்கு அனுப்புமாறு லொக்மான் ஜாமான் பொதுமக்களை கேட்டு கொண்டார்.

இதற்கு முன்பாக பேருந்து ஓட்டுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் பெறப்பட்டதாகவும் இந்த சோதனையின் போது போதைப்பொருள் எடுத்து பேருந்து செலுத்துவதாக 5 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் லொக்மான் ஜாமான் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்