புதிய தடங்கள் அமைக்கப்பட வேண்டும்

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உச்சக்கட்ட நேரத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு அந்த நெடுஞ்சாலையில் கூடுதல் வழித்தடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் நியோவ் சூ சியோங் கேட்டுக்கொண்டார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கு, Plus Malaysia Berhad நிறுவனம் 590 கோடி வெள்ளியை மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால் அந்த முதன்மை நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு வரையில் மூவாயிரத்து 639 ( 3,639 ) கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டியுள்ளது என்று நியோவ் சூ சியோங் சுட்டிக்காட்டினார்.

கிட்டத்தட்ட ஆறு மடங்கு தொகையை வருமானமாக ஈட்டியுள்ள Plus Malaysia Berhad நிறுவனம், தாம் பெறுகின்ற வருமானத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அதன் நெடுஞ்சாலைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்