புத்தாண்டை முன்னிட்டு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை

நாளை மறுநாள் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான எந்தவொரு திட்டமும் வைத்திருக்கவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் அறிவித்தார்.

தற்போது இஸ்ரேலின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கும் சில மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்திலும் வெள்ளத்தின் தாக்கமின்றி இருக்கும் இடங்களிலும் சூழலுக்கு ஏற்றவாறு புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கலாம் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், புத்ரா, மை லார்ட் மிசான் ஜைனல் ஆபிதீன் ஆகிய பள்ளிவாசல்களில் புத்தாண்டை முன்னிட்டு நாளை இஸ்லாமிய மேம்பாட்டு துறையினரின் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன என்று அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்