புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள ஆலோசனை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2

கோடை பருவநிலை தொடங்கியிருப்பதால் வெப்பத்தின் தாக்கம் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் மக்கள், திறந்த வெளி புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும்படி சுகாதார தலைமை இயக்குநர் டத்துக் டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாஸான் ஆலோசனைக்கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்கள் அதிக நேரம் வெளியே இருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் சீதோஷ்ண நிலை காரணமாக மக்களை எளிதில் வெப்ப பக்கவாதம் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்