பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கு 100 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

புத்ராஜெயா, மார்ச் 2 –

அரசாங்க சார்பு முதலீட்டு நிறுவனங்களை வழிநடத்தவிருக்கும் பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கு அரசாங்கம் 100 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் பூமிபுத்ரா தொழில்முனைவர்களின் அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் இந்த பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மூன்று நாள் பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்று, முதன்மை உரை நிகழ்த்துகையில் டத்தோஸ்ரீ இந்த 100 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

தவிர, மலாய்க்காரர் ரிசாப் ரிசாப் நிலங்களில் வாங்கத்தக்க வகையில் மடானி வீடமைப்புத்திட்டம் மூலமாக 2,500 வீடுகள் கட்டப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை மேம்படுத்த அரசு முதலீட்டு நிறுவனங்களான பெலாபுரான் ஹார்தானா பெர்ஹாட் மற்றும் பெர்மொடெலான் னெசியோனல் பெர்ஹாட் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும் பூமிபுத்ராக்களின் வருமானத் தகுதியை உயர்த்தும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் திவெட் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்