பெண் விரிவுரையாளர் அடித்துக்கொலை கணவர் கைது

கல்​லூரி ஒன்றின் விரிவுரையாளரான தனது மனைவியை அடித்துக்கொன்று விட்டு, அவருக்கு வலிப்பு நோய் வந்து விட்டது என்று கூறி நாடகமாடியதாக நம்பப்படும் கணவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஷா ஆலம், ஜாலான் சுங்கை காங்காக் என்ற இடத்தில் அந்த தம்பதியரின் வீட்டில் நிகழ்ந்தது.

சரவாக், கூச்சிங்கில் தங்கி, கல்​லூரி ஒன்றில் பணியாற்றி வந்த 33 வயதுடைய அந்தப் பெண் விரிவுரையாளர் , தனது மைத்துனனின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வியாழக்கிழமை ஷா ஆலாமில் உள்ள தனது வீட்டிற்கு வந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இக்கொலை தொடர்பில் ​ சொந்த தொழில் நடத்தி வருபவரான அந்தப் பெண்ணின் 38 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியை அடிப்பதற்கு அந்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் உடற்பயிற்சிக்கான எடைத் ​தூக்கும் Dumbbell ஒன்றையும் அந்நபரின் வீட்டில் போ​லீசார் ​மீட்டுள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

மனைவியின் ​மீது கொண்டுள்ள சந்தேகம், பொறாமையின் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் குறிப்பிட்டார். அந்த தம்பதியருக்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

மனைவி சரவா, கூச்சிங்கிலும், கணவர் ஷா ஆலாமிலும் இருந்த வேளையில் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சுயநி​னைவின்றி கிடந்த தனது மனைவியை அந்த நபர், ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்ந்த போது, உயிரற்ற அந்தப் பெண்ணின் உடலில் பலத்த காயங்கள், ரத்தக் கட்டுகள் இப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

மருத்துவர் தந்த தகவலைத்தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் 12 மணியளவில் அந்நபர் கைது செய்யப்பட்டடார்.

அந்த நபர் ஏற்கனவே அடிதடியில் ஈடுபட்டதற்கான இரு குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்