பெர்சே இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், விசாரணை அறிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 27 –

போலீஸ் துறை அனுமதி வழங்காத நிலையில் இன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் அமைதி பேரணியை நடத்திய பெர்சே இயக்க்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி னோர் டெல்ஹான் யாஹாய தெரிவித்துள்ளார்.

நூறு விழுக்காடு சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இன்று காலையில் நடத்தப்பட்ட பெர்சே பேரணி தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பேரணி நடத்தப்படுவது தொடர்பில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பு போலீஸ் துறையிடம் அறிவிப்பு செய்து இருக்க வேண்டும். எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட இப்பேரணி தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தற்போது 2012 ஆம் ஆண்டுஅமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.சி.பி னோர் டெல்ஹான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்