முன்னாள் லோரி ஓட்டுநருக்கு மரணத் தண்டனை உறுதியானது

புத்ராஜெயா, பிப்ரவரி 27 –

85 வயது மூதாட்டியை கற்பழித்ததுடன் பாலியல் வன்கொடுமை புரிந்து, அவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக முன்னாள் லோரி ஓட்டுநர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

கே. சத்தியராஜ் என்ற 31 வயதுடைய அந்த முன்னாள் லோரி ஓட்டுநர் செய்து கொண்ட மேல்முறையீட்டை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தள்ளுபடி செய்தார்.

தள்ளாத வயதில் இருந்த மூதாட்டியிடம் பாலியல் கொடுமை புரிந்து, அவரை துன்புறுத்திய சத்தியராஜ்ஜின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் தகுதிபாடுயில்லை என்று நீதிபதி ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சத்தியராஜ் க்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அளித்த மரணத் தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா மற்றும் SM கோமதி சுப்பையா ஆகியோருடன் மேல்முறையீட்டை செவிமடுத்த ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 11.40 மணியளவில் சிலாங்கூர், அம்பாங்,ஜாலான் தாசிக் தம்பாஹான் 2 என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 85 வயது மூதாட்டியின் கைகளை கட்டியப்பின்னர் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி பாலியல் கொடுமை புரிந்ததாக சத்தியராஜ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

தவிர அந்த மூதாட்டியின் தங்கச் சங்கிலியையும் சத்தியராஜ் களவாடிச் சென்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்