பெர்ஜெயா லான் வெற்றிபெற்றது, விண்ணப்பம் ஏற்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 26 –

ஆஸ்திரேலியாவிலிருந்து பினாங்கிற்கு வந்த தமது தாயார் அன்னா ஜென்கின்ஸ் என்ற அன்னப்பூரணி, மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அவரின் எலும்புக்கூடும், ஒரு கட்டுமானத் தளத்தில் கட்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பில் மலேசிய அரசாங்கம், போலீஸ் துறை மற்றும் பெர்ஜெயா லான் ஆகிய தரப்பினருக்கு எதிராக அவரின் மகன் தொடுத்துள்ள வழக்கில் பெர்ஜெயா லான் நிறுவனத்தை வழக்கிலிருந்து நீக்குவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அன்னப்பூரணியின் உடல் கண்டு பிடிக்கப்பட்ட கட்டுமானப்பணிக்காக நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த பெர்ஜெயா லான் நிறுவனத்தையும், அதன் பணியாளரையும் வழக்கின் பிரதிவாதிகளாக அன்னப்பூரணியின் மகன் வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தையும், அதன் பணியாளர் தெசெரா வையும் ஒரு பிரதிவாதியாக குறிப்பிட்டதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன் சுட்டிக்காட்டினார்.

காரணம், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதிலாக அந்த நிறுவனத்திற்கும், அதன் பணியாளருக்கும் அன்னப்பூரணியின் குடும்பம் நன்றி கூற கடமைப்பட்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், தங்களின் மேம்பாட்டுத்தளத்தில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதாக அவர்கள்தான் முதலில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்