கோலாலம்பூரில் நாளை திட்டமிட்டப்படி பேரணி நடைபெறும்

ஷாலாம், பிப்ரவரி 26 –

கோலாலம்பூர், நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்புறம் உள்ள தேசிய நினைவு சின்ன வெளிவளாகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை திட்டமிட்டப்படி பேரணி நடைபெறும் என்று தேர்தல் சீர்திருத்தங்களை கோரும் இயக்கமான பெர்சி அறிவித்துள்ளது.

பேரணி குறித்து தெரிவிக்கும் கடிதம், கோலாலம்பூர் டாங் வாங்கிமாவட்ட போலீஸ் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெர்சே தலைவர் முகமட் பைசால் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

இந்த பேரணியின் மூலம் 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரி, நடப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரணியின் போது அரசாங்கத்திடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு மகஜர் வழங்கப்படுவது ஜனநாயக நாட்டில் வழக்கமான நடைமுறையாகும். எனவே இந்த பேரணி நடத்தப்படுவது புதியது அல்ல என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்