பேராக்கில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது

பேராக், ஏப்ரல் 18-

பேராக்கில் நீரின் கட்டணம் 5 சென் அதிகரித்து ஒரு கன மீட்டருக்கு 75 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து அந்த புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக மாநில மந்திரி பெசாரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு, 20 கன மீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு 5 சென் அதிகரிக்கப்படுகின்றது. 21 முதல் 35 கனமீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு, இதற்கு முன்பு இருந்த 1 வெள்ளி 3 சென் கட்டணத்தைவிட, 1 வெள்ளி 8 சென்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய கட்டணமானது, நீர் சேவை ஆணையம் – SPAN, நிர்ணயித்துள்ள சராசரி விகிதமான 22 சென்- யை விட மிக குறைவானதாகும். இலக்கிடப்பட்டவர்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் 25 கனமீட்டர் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான 20 கனமீட்டர் இலவச நீர் திட்டத்திற்கு அது பெரும் பாதிப்பை வழங்காது என்று தெரியவந்துள்ளது.

அதோடு, மாதத்தில், முதல் 10 கனமீட்டர் நீர் பயன்பாட்டிற்கு 40 சென் கட்டணக்கழிவு வழங்கப்படும் என அது கூறியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்