நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது

கோலாலம்பூர், ஏப்ரல் 18-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் – நட்மா தெரிவித்துள்ளது.

நேற்று ஆயிரத்து 319 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை மணி 6 அளவில் 759 பேராக குறைந்துள்ளது. Selangor-ரிலுள்ள 3 நிவாரண மையங்களில் 634 பேரும், நெகிரி செம்பிலான்-னில் 77 பேரும் மலாக்காவில் 48பேரும் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர்-ரிலுள்ள கிள்ளான் ஆறு, தெரெங்கானு-னிலுள்ள பேசுட் ஆறு ஆகியவற்றில் நீர் மட்டம் அபாய அளவில் பதிவாகியுள்ளது. அதேவேளையில், மலாக்கா-வில் டுயோங் ஆறு, நெகிரி செம்பிலான்-னில் லிங்கி ஆறு, சிலாங்கூர்-ரில்சுங்கை பூலோ மற்றும் கோலா சிலாங்கூர் ஆறுகள் முதலானவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளதாக, நட்மா அறிக்கையில் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்