பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

கோல குபு பாரு, மே 03-

வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் வாக்காளர்களில் குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தவுடனே அப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை போலீஸ் துறை தொடங்கிவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியொன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலகுபு பாருவில் உள்ள அரச மலேசிய போலீஸ் படையின் அகாடாமியில் இன்று நடைபெற்ற ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைபுடின் இதனை குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தினத்தன்று பொது மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் போது எவ்வித அச்சமும் கொள்ள அவசியமில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதில் போலீஸ் துறை மிகுந்த விழிப்புணர்வுடன் கடமையாற்றுவர் என்று சைபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்