பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளர் ஃபிசா கமருடின் காலமானார்

பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளரான சித்தி நோர் ஹபிஸா கமருதீன் என்கிற ஃபிசா கமருடின் உடல்நலக்குறைவால் லண்டன், Charing Cross மருத்துவமனையில் நேற்று இரவு 11:00 மணியளவில் காலமானார்.

40 வயதுடைய ஃபிசா கமருடின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்ததுடன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரின் கணவர் முகமது ரோஷ்டி தெரிவித்தார்.

லண்டனில் விடுமுறை முடிந்து மலேசியா திரும்பிய பொழுது கடந்த புதன்கிழமை Heathrow Airport -டில் சுயநினைவின்றி காணப்பட்ட ஃபிசா கமருடின்- யை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக முகமது ரோஷ்டி விளக்கினார்.

KRU Media – விற்கு சொந்தமான Boom Malaysia, Jurnal Malaysia ஆகிய இணையத்தளங்களுடன் தொடர்புடைய ஃபிசா கமருடின், தம் குடும்பத்துடன் இம்மாதம் லண்டனுக்கு ஒரு சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு பின் சென்றதாகவும் முகமது ரோஷ்டி விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்