போதைபொருளை விநியோகித்த குற்றச்சாட்டில், கார் கழுவும் தொழிலாளர் தூக்குத்தண்டனையிலிருந்து தப்பினார்.

கோலாலம்பூர், மே 20-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் – KLIA-யில், கடந்த 2019ஆம் ஆண்டு 7.3 கிலோகிராம் எடையிலான போதைப்பொருளை கொண்டு சென்ற குற்றத்திற்காக, ஷாஹ் அலாம் உயர்நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத்தண்டனையிலிருந்து உயிர் தப்பியுள்ளார், சுய் கா ஃபை எனும் ஆடவர்.

கார் கழுவும் வேலை செய்துவந்த அவ்வாடவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனைக்கு எதிராக, மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அவரது தண்டனை 30 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள் என குறைக்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில், சபாபிற்கு பயண பெட்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது, KLIA-வில் பிடிப்பட்ட அவ்வாடவர், அந்த பயணப்பெட்டி தனது முதலாளியான ஜாக்கி என்பவருக்கு சொந்தமானது என்றும், அதில் போதைப்பொருள் உள்ளது தமக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

ஆனால், விசாரணையில், அவர் கூறியது போல், JACKIE எனும் பெயரில் யாரும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய மூவர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில், அவருக்கான தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்