சாலையில் அடாவடித்தனம்; 65 மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

பினாங்கு, மே 20-

பினாங்கு, பயான் லெப்பாஸ், சீகேட் அருகேயுள்ள துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில், சாலையில் அடாவடித்தனம் மற்றும் சட்டவிரோத பந்தையங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக பாராத் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகம் நேற்று அதிரடி சோதணையை நடத்தியது.

அதில், சுமார் 65 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பாராத் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்டென்டென் கமாருல் ரிசல் ஜெனல் தெரிவித்தார்.

பாராத் டாயா மாவட்ட சாலை போக்குவரத்து அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு, தென் செபராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைமையகம், பினாங்கு சாலை போக்குவரத்து துறை – JPJ ஆகியவற்றை உட்படுத்தி சுமார் 32 அதிகாரிகள் அச்சோதணையில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதணையில், 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் 65 மோட்டார்சைக்கிள்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டன.

பல்வகை சாலை குற்றங்கள் தொடர்பில், 342 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டவேளை, 40 வாகனங்களை சோதணைகளுக்கு உட்படுத்துவதற்கான நோட்டீஸ்களை, பினாங்கு JPJ வெளியிட்டதாக, கமாருல் ரிசல் ஜெனல் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்