போதைப்பொருள் பதனிடும் கும்பல் முறியடிப்பு

கிள்ளான், கம்போங் புக்கிட் செராக்கா -வில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 611 வெள்ளி மதிப்புள்ள methamphetamine வகையைச் சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது மூலம் போதைப்பொருள் பதனிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் பதனிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல வகையான பொருட்களையும், ரசாயன மருந்துகளையும், தளவாடங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

சந்தேகப்பேர்வழிகள் அந்த தொழிற்சாலையில் தங்கியிருக்கவில்லை என்றாலும் அவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக அவ்விடத்தில் செயல்பட்டு வந்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

அந்த தொழிற்சாலை பகுதியில் ஒரு சிறிய நிலத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு கொள்கலன் ஒன்று இறக்கப்பட்டு அதில் போதைப் பொருள் பதனிடும் நடவடிக்கையில் சந்தேகப்பேர்வழிகள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் கான் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்